”கோட்டாபய விரைவில் வருவார்”: பொதுஜன பெரமுன
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் நாடு திரும்புவார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே செயலாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம், முன்னாள் ஜனாதிபதி இலங்கையை விட்டு வெளியேறிய நிலைமையை நாம் அனைவரும் அறிவோம்.
ஒரு முன்னாள் ஜனாதிபதிக்கு பொருத்தமான பாதுகாப்பு மற்றும் வசதிகள் வழங்கப்பட வேண்டும் அதற்குத் தேவையான ஏற்பாடுகள் இப்போது செய்யப்பட்டுள்ளதாக நான் நினைக்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
-(3)




