கோணமலைக் குளக்கோட்டன் பேரன் நீ .. எழுக தமிழாய் அணிதிரள்வாய்..
எழு… எழு …. எழு தமிழா !
உன் கரங்களின் விலங்கறுத்து !
எழு… எழு… எழு தமிழா
உன் உரிமைக்கு குரல் கொடுக்க !
உளி விழ ….விழ…. கருங்கல்லுடையும்
தழல் சுட… சுட…சுடத்தான் இரும்பும் வளையும்
ஓய்வில்லை அலைகளுக்கு ….
சோர்வில்லை நதிகளுக்கு ….
முடிவில்லை நீள் வானத்திற்கு ….
அழிவில்லை தன் மானத்துக்கு…..
விடிவில்லை கதிர் உறங்கின் !
விடுதலையில்லை நீ பணியின்!!!
மான மறவரின் பேரீகம் கண்டாய் !
ஈனர் செய்த இனத்துரோகம் பார்த்தாய்!
ஏணை குழந்தை இனியும் நீயில்லை !!
கோணமலைக் குளக்கோட்டன் பேரன் நீ
எழுக தமிழாய் அணிதிரண்டு ………..
விழுதென தாங்கிடு தமிழ்த் தேசத்தை !!
-கொற்றவை




