கோதாபய ஜனாதிபதிக்கும் மேலான அதிகாரம் கொண்டவர் போன்றே நடந்துக்கொண்டார்
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ கடந்த ஆட்சிக் காலத்தில் போது ஜனாதிபதிக்கும் மேலான அதிகாரம் கொண்டவர் போன்றே செயற்பட்டதாகவும் இதன்படி மகிந்த ராஜபக்ஷ அவருக்கு பயந்தே செயற்பட்டதாகவும் அமைச்சரவை பேச்சாளரான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் மேலாகவே கோதாபய ராஜபக்ஷ செயற்பட்டார். அச்சுறுத்துவதனையே செயற்பாடாக கொண்டிருந்தார். மகிந்த ராஜபக்ஷ அவருக்கு கீழேயே செயற்பட்டார். யாருக்கேனும் வெள்ளை வானை அனுப்ப வேண்டுமென்றால் கோதாவுக்கே ராஜபக்ஷவும் கூறுவார். அப்படியான நிலைமையே அப்போது இருந்தது. அவரின் துப்பாக்கி தெற்கில்தான் செயற்பட்டது. வடக்கில் இல்லை. என அவர் தெரிவித்துள்ளார். -(3)




