கோதாபாய மீது மோசடியைக் கண்டறியும் விசாரணை ஆணைக்குழு விசாரணை
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர், மோசடியைக் கண்டறியும் விசாரணை ஆணைக்குழுவிற்கு இன்று அழைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான விசாரணை அங்கு இடம்பெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானப் படைக்குச் சொந்தமான விமானத்தினை தனது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தியதோடு, பாதுகாப்பு படையினர் இருவரை அமெரிக்காவில் உள்ள பசில் ராஜபக்ஸவின் இல்லத்திற்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தியமை தொடர்பான விசாரணைகளுக்காகவே இவர் இன்று அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த விசாரணைகளுக்காக கடந்த மாதம் 18ஆம் திகதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இருந்த போதிலும் இவர் அன்றைய தினம் விசாரணை ஆணைக்குழுவிற்கு சமூகம் அளிக்காமல், தனது சட்டத்தரணி ஊடாக வேறொரு தினத்தை கோரியிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய இன்றைய தினம் பிற்பகல் ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவிற்கு கோத்தபாயவை ஆஜராகுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




