கோதாவுக்கு அச்சுறுத்தல் விடுத்த துமிந்த
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பெற்றுக்கொடுக்குமாறு அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் அவர் இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்ததாகவும் ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எந்தவித அச்சுறுத்தலும் விடுக்கவில்லையென கோதாபய தெரிவித்துள்ளார்.
ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர் அங்குள்ள இலங்கையர்கள் மற்றும் இலங்கையர் அமைப்புகளுடன் மேற்கொண்ட சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அத்துடன் நாம் முன்னெடுத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சட்டமும் ஒழுங்கும் கட்டியெழுப்ப நாம் மேற்கொண்ட நகர்வுகளை வைத்துக்கொண்டே இந்த அரசாங்கம் நகர்கின்றது. புதிய அரசாங்கத்தினால் நாட்டின் பாதுகாப்பிற்கு எந்த முயற்சிகளும் முன்னெடுக்கப்படவில்லை என முன்னாள் பாதுகாப்பது செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். -(3)




