செய்திகள்

சக கைதிகளுக்கு யோகா கற்பிக்கும் நாமல்

நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் மகனும்  எம்.பியுமான நாமல் ராஜபக்ஷ  சிறைக்குள் கைதிகளுக்கு யோகா கற்பிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் அவரை பார்ப்பதற்காக அவரின் தாயாரும் மற்றும் அவரின் சகோதரர்களான யோஷித்தவும் , ரோஹித்தவும் வெலிக்கடை மெகசின் சிறைச்சாலைக்கு சென்றிருந்தனர்.
அத்துடன் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அங்கு சென்றிருந்தனர். அவரை பார்வையிட்டு வந்தவர்களே நாமல் ராஜபக்ஷ உள்ளே சந்தோசமாக மற்றைய கைதிகளுக்கு யோகா கற்றுக்கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நாமல் ராஜபக்ஷ மாமிச உணவுகள் உண்பதில்லையெனவும் அவர் எப்போதும் மரக்கறி உணவுகளையே உண்பவர் எனவும் அவரின் சகோதரர் ரோஹித்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு சிறைச்சாலையில் வழங்கப்பட்ட உணவையே உண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் அவரின் தாயார் நேற்றைய தினம் அவரை பார்க்க வரும் போது வீட்டிலிருந்த உணவை எடுத்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.  R-06.