செய்திகள்
சஜித்துடன் பீரிஸ் அணி கைக்கோர்த்தது!
ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியுடன் சுதந்திர மக்கள் சபையை சேர்ந்த பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இணைந்துகொண்டுள்ளது.
பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், கலாநிதி நாலக கொடஹேவா, டிலான் பெரேரா, வசந்தயாப்பா பண்டார, கே.பி.குமாரசிறி, உபுல்கலப்பதி ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியுடன் இணைந்துகொண்டுள்ளனர்.
இவர்கள் இன்று ஐக்கிய மக்கள் சக்தியுடனான உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.
-(3)




