செய்திகள்

சஜித் – அனுரவுக்கு பகிரங்க சவால் விடுக்கும் ரணில்!

பேசினோம். தற்போது அவர்களுடனான ஒப்பந்தத்துடன் செயற்படுகிறோம். எமக்கு கஷ்டமான காலம் இருந்தது. பணத்தை அச்சிட முடியவில்லை. கடன்பெற முடியவில்லை. அதற்கான வரியை அதிகரித்து, கட்டணங்களை அதிகரித்து வருமானத்தை அதிகரித்தோம். அந்த சுமைகளைத் தாங்கிய மக்களுக்கு நன்றி.  இன்று சுமை குறநை்திருக்கிறது.

இன்று மின்,கேஸ் கட்டணங்கள் குறைந்துள்ளன. சுமைகள் ஓரளவிற்கு குறைந்துள்ளன. ரூபாவின் பெறுமதியை வலுப்படுத்திய பின்னர் ஏனைய சலுகைகளை வழங்குவோம். மேற்கூறிய ஒப்பந்தங்களின் இலக்குகளையும் அடைய வேண்டும். அவற்றை அடைந்தால் நாடு வலுவடையும். அதுவே அரசாங்கத்தின் திட்டமாகும்.

எதிர்கட்சியினர் பொருட்களின் விலையை குறைப்பதாகச் சொல்கிறார்கள். வரியை குறைத்தால் வருமானம் குறையும். அதனால் நாம் மீண்டும் 2022ஆம் ஆண்டின் நிலைக்குச் செல்ல வேண்டும். எனவே ரூபாயின் பெறுமதியை அதிகரித்த பின்னர் வரியை குறைப்பதே நல்லதாகும்.

நாம் இரவில் விழுந்த குழியில் பகலிலும் விழக்கூடாது. கோட்டாபய ராஜபக்‌ஷவும் ஐ.எம்.எப் பேச்சை கேட்காமலேயே வரியைக் குறைத்தார். அதனால் ஒப்பந்தங்களை மாற்ற வேண்டுமானால் மீண்டும் 18 நாடுகளுடனும் பேச வேண்டியிருக்கும். அதனால் எதிர்க்கட்சிகள் பொய் சொல்கிறார்கள் என்பது தெரிகிறது. எதற்காக பொய் சொல்கிறார்கள் என்பதே எனது கேள்வியாகும். இந்த முயற்சிகளை மேற்கொள்ள எமக்கு இரு வருடங்கள் தேவைப்பட்டன. இந்த ஒப்பந்தங்களை மாற்ற எந்த தரப்பும் இணக்கம் தெரிவிக்காது.

சர்வதேச நாணய நிதியம் நினைத்தாலும் அதனை தனியாக செய்ய முடியாது.  கிரேக்கத்திலும் இதுவே நடந்தது.  அந்த நாட்டில் பொருளாதாரம் சரிவடைந்தது.  அப்போது அந்த நாட்டின் எரிக்கட்சி போலி வாக்குறுதிகளை வழங்கி தேர்தலை வென்றது.  ஐ.எம்.எப் நிபந்தனைகளை மாற்றுவோம் என்றது. அந்த நிபந்தனைகளை மாற்ற பொது மக்கள் வாக்கெடுப்பு நடத்துவதாகவும் அந்நாட்டில் புதிய பிரதமர் மேற்படி அமைப்புக்களுக்கு அறிவித்தார். ஆனால் மறுதினமே அந்த அமைப்புகள் நிபந்தனையை மாற்ற முடியாதென அறிவித்தன.

ஆனாலும் அந்த நாட்டில் ஒப்பந்தத்தை இரத்துச் செய்ய பொது மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பின்னர் ஒப்பந்தத்தை இரத்துச் செய்ததன் விளைவாக அந்த நாட்டின் பொருளாதாரம் முற்றாக சரிந்து போனது. அதனால் அந்த நாட்டின் நிதி அமைச்சர் மீண்டும் மேற்படி மூன்று அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களின் நிபந்தனைகளுக்கு இணங்கினார். ஆனாலும் நாட்டில் 13 வீதமாக காணப்பட்ட வரியை 23 சதவீதமாக அதிகரிக்க வேண்டிய நிலை வந்தது.

அதனால் நமது நாட்டிலும் எதிர்கட்சியினர் என்ன செய்ய போகிறார்கள் என்பதை வௌிப்படையாக கூற வேண்டும். இந்த ஒப்பந்தத்தில் கைசாத்திட்டதன் பலனாக எமக்கு உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து  மாதாந்தம் 700 மில்லியன் டொலர்கள் கிடைக்கும். அதற்கு ஜப்பானும் உதவிகளை வழங்குவதாக கூறியுள்ளது.

தற்போது நம்மிடம் இருக்கும் பணம் ஜனவரி வரையில் போதுமானதாக இருக்கும்.  ஒக்டோபர் மாதத்தில் அவர்கள் நாட்டுக்கு வந்து நாட்டின் நிலையை ஆராய்வர். ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியிலிருந்தால் இதனை முன்னோக்கி கொண்டுச் செல்லும் விதம் குறித்து பேசுவோம். ஜே.வி.பியும், ஐக்கிய மக்கள் சக்தியும் என்ன சொல்ல போகிறார்கள். இதனைத் திருத்தம் செய்வோம் என்று சொல்லுவார்கள். அதனை கேட்டால் அவர்கள் நிதி வழங்குவதை நிறுத்திவிடுவர்.  மீண்டும் பழைய யுகத்திற்கு செல்ல வேண்டியிருக்கும்.  இதனை பேசி முடிக்கவே மூன்று நான்கு மாதங்கள் தேவைப்படும். 5 மாதங்கள் நாட்டு மக்கள் பணமின்றி கஷ்டப்பட முடியாது.

எனவே, எதிர்க்கட்சிகள் அதற்கான மாற்று வழிகளை குறிப்பிட வேண்டும். நாட்டை அழித்துவிட வேண்டாம். மூன்று கட்சிகளும் இணைந்து சர்வதேச நாணய நிதியத்துடன் பேசுவோம். அந்த விடயத்தை முழு நாட்டுக்கும் சொல்வோம். இறுதியில் மூச்சுவிடவும் வரி விதிக்கும் நிலைக்கு வந்துவிடக்கூடாது. மக்களுக்கு உண்மையை சொல்லுங்கள்.  அதனால் நாட்டு மக்கள் சிலிண்டர் சின்னத்து வாக்களியுங்கள். இல்லாவிட்டால் சிலிண்டர் அற்ற யுகம் மீண்டும் வரும். அதை நினைத்து அழ வேண்டாம்.” என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

-(3)