செய்திகள்

சஜின்வாசுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தனவுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் 21ஆம் திகதிவரை சஜின்வாசை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் இன்று உத்தரவிட்டார்.

அதேநேரம் சஜின்வாஸ் இன்று நீதிமன்றுக்கு காய்ச்சல் காரணமாக சமூகமளிக்கவில்லை. தொடர்ந்தும் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்