சட்டமறுப்பு போராட்டத்தை முன்னெடுப்போம்: அரசாங்கத்திற்கு கூட்டமைப்பு எச்சரிக்கை!
அரசாங்கம் தொடர்ந்தும் வடக்கு, கிழக்கில் இனவாத செயற்பாடுகளில் ஈடுபடுமாக இருந்தால் சட்ட மறுப்பு போராட்டத்தை முன்னெடுப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்.
அரச இயந்திரம் தொடர்ந்தும் வடக்கு, கிழக்கில் இனப்பாகுபாட்டை காட்டியவாறு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. பாராளுமன்றத்திலும் நாங்கள் பேசும் போது அவ்வாறே அவர்கள் செயற்படுகின்றனர். இதனை அனுமதிக்க முடியாது.
வடக்கு, கிழக்கில் காணி அபகரிப்பு, பௌத்த மயமாக்கல் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபடுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் இல்லையென்றால் ஒத்துழைக்காமை இயக்கத்துடன் சட்டமறுப்பு போராட்டத்தை முன்னெடுப்போம் என்று அவர் தெரிவித்தார்.
-(3)




