செய்திகள்

சண்டை பயிற்சி எடுக்கிறார் – அதிரடி கதையில் அனுஷ்கா

கடந்த வருடம் வெளியான பாகமதி படமும் வெற்றி பெற்றது. அதன்பிற்கு உடல் எடை கூடியதால் பட வாய்ப்புகள் குறைந்தன.வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று எடையை குறைத்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மாதவனுடன் நிசப்தம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதைதொடர்ந்து கவுதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவும் அனுஷ்காவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். ஏற்கனவே கவுதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் அனுஷ்கா நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் அனுஷ்கா அதிரடி வேடத்தில் நடிப்பதாகவும் இதற்காக சண்டை பயிற்சிகள் எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.இந்த படத்தின் கதையை இந்தி கதாசிரியரும் இயக்குனருமான கோவிந்த் நிஹலானி எழுதி உள்ளார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.(15)625.500.560.350.160.300.053.800.900.160.90 (1)