செய்திகள்

சந்திரபாபு நாயுடு கைது!

இந்தியாவின் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய தலைவருமான சந்திரபாபு நாயுடு இன்று (09) காலை கைது செய்யப்பட்டார்.

திறன் மேம்பாட்டுத் திட்ட முறைகேடு வழக்கில் ஆந்திர மாநில குற்றப் புலனாய்வுத் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2014-17 ஆம் ஆண்டு வரையிலான ஆட்சிக் காலத்தில், திறன் மேம்பாட்டு கழகத்தில் 317 கோடி இந்திய ரூபா ஊழல் நடந்ததாக நான்கரை வருடங்களுக்கு முன்னர் இந்த வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் தெலுங்கு தேச சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கண்ட ஸ்ரீநிவாசராவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

-(3)