சந்திரிக்காவை விட்டுவிட்டு சர்வதேசம் எனக்கு எதிராக இருப்பது ஏன் : மகிந்த கேள்வி
நாட்டில் 3/4 யுத்தத்தை முடித்ததாக கூறுவோரை விட்டுவிட்டு சர்வதேசம் என்னை மட்டும் பின்தொடர்வது ஏன் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார்.
தான் ஜனாதிபதியாக இருந்த போது 3/4 யுத்தத்தை முடித்துவிட்டதாகவும் மிகுதி 1/4 யுத்தத்தையே மகிந்த ராஜபக்ஷ முடித்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க குமாரதுங்க தெரிவித்துள்ள நிலையில் அது தொடர்பாக நேற்று நாமல் ராஜபக்ஷவை சிறைச்சாலைக்கு பார்க்க சென்ற மகிந்தவிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் யுத்தத்தை முடித்திருந்தால் ஏன் சர்வதேசம் என்னை பின்தொடர வேண்டும். சர்வதேசத்தில் விடுதலைப்புலி ஆதரவளர்களிடமிருந்து எனக்கே அச்சுறுத்தல் உள்ளது. என அவர் தெரிவித்துள்ளார். -(3)




