செய்திகள்

சபைக்கு சமர்ப்பித்த பின்னரே இந்தியாவுடன் பொருளாதார உடன்படிக்கை

இந்திய  இலங்கை பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை  தயாரிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே இந்தியாவுடன் கைச்சாத்திடப்படும் என அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின் போது  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எம்.பி. உதயகம்மன்பில எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இதனைத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறுகையில்;
இந்திய  இலங்கை பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட நாம் விரும்புகிறோம். இதற்கான உடன்படிக்கை தயாரிக்கப்பட்டு வருகின்றது. இது தயாரிக்கப்பட்ட பின்னர் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு
அனைவரினதும் ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே இந்தியாவுடன் கைச்சாத்திடப்படும்.
இந்தியாவுடனான இந்த உடன்படிக்கையை 2016 ஆம் ஆண்டு முடிவடைவதற்குள் செய்து கொள்ள எதிர்பார்க்கின்றோம் என்றார்.
n10