செய்திகள்

சபைக்கு வந்த ”எழுக தமிழ்” விவகாரம்

யாழ்பாணத்தில் அண்மையில் நடத்தப்பட்ட ”எழுக தமிழ்” நிகழ்வில் வடக்கு முதலமைச்சர் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக நேற்று செவ்வாய்கிழமை பாராளுமன்றத்தில் வாத விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளன.
தினேஸ்குணவர்தன மற்றும் வீரவன்ச ஆகியோர் வடக்கு முதலமைச்சரின் செயற்பாடுகள் தொடர்பாக விமர்சனங்களை முன்வைத்து அவருக்கு எதிராக என்ன நடவடிக்கையெடுக்கப் போகின்றீர்கள் என கேள்விக்களை அரசாங்க தரப்பிடம் முன்வைத்துள்ளனர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல விக்னேஸ்வரன் தன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக பதிலளித்துள்ளார். அதன்பின்னர் அதனை கிளறுவதில் அர்த்தமில்லையென கூற குறுக்கிட்ட வீரவன்ச அப்படி அவர் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியை சரி செய்யுமாறு அறிவிப்பு விடுக்கவில்லை. என கூறினார்.
இதேவேளை எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் உரையாற்றுகையில் விக்னேஸ்வரன் சர்சைக்குறிய விடயங்களை வெளியிடவில்லையென அவரே கூறியுள்ள நிலையில் இது தொடர்பாக மேலும் எதுவும் கூற வேண்டுமென்றில்லை என தெரிவித்துள்ளார். -(3)