சமந்தா பவரை சந்தித்து சந்திரிகா பேச்சு: நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வு
ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதி சமன்தா பவர் முன்னாள் ஜனாதிபதியும் தேசிய நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் தலைவருமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை சந்தித்து உரையாடியுள்ளார்.
நியூயோர்கிலுள்ள ஐக்கிய நாடுகளின் இலங்கை பணிமனையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின் போது, இலங்கையினால் முன்னெடுத்து செல்லப்படும் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவினையும் அமெரிக்கா வழங்கும் என சமன்தா பவர் உறுதியளித்துள்ளார்.
இதுதவிர, தேசிய இன நல்லிணக்க அலுவலகம் எதிர்நோக்கும் சவால்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டதாக தூதுவராலயம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னைய அரசாங்க நிர்வாகத்தின் போது இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பாக தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மற்றும் பொருளாதாரத்தினை கட்டியெழுப்ப எதிர்நோக்கும் சவால்கள் குறித்தும் இந்த சந்திப்பின் போது ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
R-06




