செய்திகள்

சமஸ்கிருதம் எப்போது எப்படி தோன்றியது ?

கிரேக்கர், சகர்கள் (Scythian),குஷானர்கள் (Kushan),ஹூனர்கள் (Huns) மற்றும் ஈரானில் காலத்துக்கு காலம் அரசுகளை உருவாக்கிய பார்த்தியன்(Parthians) போன்ற பாரசீகர் போன்றவர்களின் தொடர்ச்சியான படையெடுப்பால் உருவான தொடர்பு மொழியே சமஸ்கிருதம் ஆகும்.

இவர்களே ஆரியர் என்று தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டவர்கள்.

சிந்துவெளி நாகரிகத்தின் வீழ்ச்சியின் பின்னர் உருவான கங்கை சமவெளி அரசுகளின் மொழியாக பிராகிருத மொழிகளே இருந்தன. கங்கைச் சமவெளியில் சமஸ்கிருதம் உருவாகவில்லை.

அலெக்ஸாண்டரை(பொது ஆண்டுக்கு முன் 356-323) தொடர்ந்து வடமேற்கு இந்தியாவில் இடம்பெற்ற பல்வேறு இனக்குழுக்களின் தொடர்ச்சியான படையெடுப்புகளும் அரசு உருவாக்கங்களும் இடம்பெற்றன.

அந்த வடமேற்கு இந்தியாவிலேயே சமஸ்கிருதம் உருவானது.பாணினியும் வடமேற்கு இந்தியாவைச் சேர்ந்தவரே தவிர கங்கைச் சமவெளியை சேர்ந்தவரல்ல.

இவ்வாறான படையெடுப்புகளினால் உருவான இனக்குழுக்களின் திரட்சியே பிற்காலத்து ராஜ புத்திரர்கள்.

வேத காலப் பிராமணர்கள் வருகை இந்த ஆரியப் படையெடுப்புகளுக்கும் சமஸ்கிருத உருவாக்கத்துக்கும் குறைந்தது ஆயிரம் ஆண்டுகள் முற்பட்டது.

எப்படி பிற்காலத்தில் மொகலாயப் படையெடுப்பாளர்களால் ஹிந்தி/உருது என்ற மொழி உருவானதோ அதேபோன்றே அலெக்ஸாண்டரின் பின்னர் வடமேற்கு இந்தியாவில் நடந்த படையெடுப்புகளாலும் உருவான ஆக்கிரமிப்பு அரசுகளாலும் உருவான மொழியே சமஸ்கிருதமாகும்.

1.வேத கால மக்களின் வருகை (பொது ஆண்டுக்கு முன்-கி.மு 1500) அவர்களின் மொழி வேதங்களின் மொழியான சந்தஸ்.

அந்த வேத மொழி பேசிய மக்களும் வட இந்திய திராவிட மக்களும் கலந்து அவர்களின் மொழிகளின் கலப்பினால் பிராகிருத மொழிகள் உருவாகின.வேத மொழி வழக்கொழிந்தது.

2.வடமேற்கு இந்தியாவில் பொது ஆண்டுக்கு முன்-கி.மு நான்காம் நூற்றாண்டிலிருந்து இடம்பெற்ற படையெடுப்புகளாலும் உருவான படையெடுப்பாளர்களின் அரசுகளாலும் உருவான புதிய தொடர்பு மொழியே சமஸ்கிருதம்.அந்தப் பிற்காலத்துப் படையெடுப்பாளர்களையே ஆரியர் என்று தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

3. அதற்கு ஆயிரம் வருடங்களுக்கு பின்னர் பொது ஆண்டு 13 ஆம் நூற்றாண்டிலிருந்து நடந்த இஸ்லாமிய படையெடுப்புகளாலும் ஆட்சிகளாலும் உருவான தொடர்பு மொழியே ஹிந்தி/உருது.

வேதமொழிக்கும் சமஸ்கிருதத்துக்கும் குறைந்தது ஆயிரம் வருட வேறுபாடு இருக்கின்றது.

சமஸ்கிருதத்துக்கு ஹிந்திக்கும் குறைந்தது ஆயிரம் வருட வேறுபாடு இருக்கின்றதது.

இவை மூன்றும் மூன்றுவிதமான மக்கள் புலப்பெயர்வுகளால் உருவான மூன்று வெவ்வேறு மொழிகள்.ஒரே மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதால் பல சொற்களின் ஒற்றுமையால் தொடர்புடையவை போன்று தோன்றுகின்றனவே தவிர ஒன்றின் இயல்பான பரிணாம வளர்ச்சியால் மற்றொன்று உருவாகவில்லை.

பிராமண சாதிகளை சேர்ந்தவர்கள் சமஸ்கிருதத்தை தமது தந்தை வழி மூதாதையர்களின் மொழியாக நினைப்பது வரலாற்றுப் புரிதலின்மையின் விளைவாகும். அவர்களின் சில மூதாதையர்களின் மொழி வேத மொழியாகும். அது சமஸ்கிருதம் உருவாகுவதற்கு முன்னரே வழக்கொழிந்துவிட்டது.

சமஸ்கிருதம் வடமேற்கு இந்தியாவில் உருவாகிக்கொண்டிருந்தவேளை தமிழ்ப் பிராமணர்கள் தமது முன்னோர்களில் பெரும்பான்மையினரின் தாய் மொழியான தமிழில் சங்கப் பாடல்களை எழுதிக்கொண்டு இருந்தனர்.

சிவேந்திரனின் முகநூல் பதிவிலிருந்து: https://www.facebook.com/nsivendran

1 2 3 4