சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த தீர்மானிக்கவில்லை : ஊடக அமைச்சர்
பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என்று பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் மாநாட்டில் சமூக வலைத்தளங்களை ஒழுங்குறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதா என்று செய்தியாளர் கேட்கையில் ,
இதற்கு அமைச்சர் கஜந்த கருணாதில பதிலளித்தார்.
சமூக வலைத்தளங்களை ஒழுங்குறுத்துவதற்கான நடைமுறை உலக நாடுகளில் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இவ்வாறான சமூக வலைத்தளங்களை பொதுமக்கள் பயன்படுத்துவது தொடர்பில் அவற்றை தெளிவுபடுத்துவதற்கு நாம் முயற்சிக்கின்றோம் . ஆனால் இதனை கட்டுப்படுத்துவதற்கோ நிறுத்துவதற்கோ நாம் தீர்மானிக்கவில்லை என்று குறிப்பிட்டார். -(3)




