செய்திகள்

சம்பந்தனின் மறைவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா. வெளியிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் அவர் இந்த இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஸ்ட தலைவர் சம்பந்தனின் குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு அழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

சம்பந்தனுடனான சந்திப்புக்கள் என்றேன்றும் நினைவில் மிளிரும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை வாழ் தமிழ் சமூகத்தின் சமாதானம், பாதுகாப்பு, சமத்துவம், நீதி மற்றும் கௌரவத்திற்காக அயராது குரல் கொடுத்து வந்த தலைவர் சம்பந்தன் என மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

சம்பந்தனின் மறைவு அவரது இலங்கை இந்திய வாழ் நண்பர்கள் மற்றும் பின்தொடர்வாளர்களுக்கு பெரும் இழப்பாக அமையும் என நரேந்திர மோடி தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

-(3)