சம்பளங்கள் மற்றும் பதவியணி ஆணைக்குழுவினை அமைக்க அரசாங்கம் தீர்மானம்
2015 ஜனவரி மாதம் 8 ஆந் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அடிப்படையில் மொத்த அரச சேவையின் செயலாற்றுகை மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கும் அரச ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தினையும் மற்றும் சேவைத் திருப்தியினையும் உயர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் உறுதியுரை வழங்கப்பட்டது.
எதிர்கால அபிவிருத்தி வேலைத்திட்டங்களைத் கவனத்திற் கொண்டு தற்போதுள்ள சம்பள அளவுத்திட்டம் மற்றும் பணிக்குழாத்தினர் எண்ணிக்கையினை விரிபடுத்தல் மற்றும் முறையான வகையில் அதனை மீளாய்வு செய்து மிகவும் உற்பத்தித் திறனுடைய திருப்தியடைந்த அரச சேவையினை உருவாக்குவதற்காகவும் தனியார் துறையின் ஊழியப்படைத் தேவையினைக் கருத்திற் கொண்டு சம்பளம் மற்றும் பதவியணிக் கொள்கையினைத் தயாரிப்பதற்காக புதிய சம்பளங்கள் மற்றும் பதவியணி ஆணைக்குழு ஒன்றினைத் தாபிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.




