செய்திகள்

சம்பிக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்ககப்பட்டது : 42 பேர் கையொப்பமிட்டுள்ளனர்

மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் பெருநகர அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்ல பிரேரணையை கொண்டுவர ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.
இதன்படி அந்த பிரேரணை நேற்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இதற்கு ஆதரவாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த 42 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இராஜகிரிய பகுதியில் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிற்கு சொந்தமான வாகனத்தில் மோதி இளைஞர் ஒருவர் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பிலேயே இவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
n10