செய்திகள்
சம்பிக்க மீதான குற்றச்சாட்டு உறுதியானால் அவர் கைது செய்யப்படுவார் : சுஜீவ சேனசிங்க தெரிவிப்பு
அமைச்சர் சம்பிக்க ரணவக்க செலுத்திய வாகனமொன்றில் மோதி இளைஞன் ஒருவன் பலத்த காயமடைந்துள்ள தெரிவிக்கப்படும் விடயம் தொடர்பாக பொலிஸார் முறையாக விசாரணை நடத்தவில்லையென குற்றச்சாட்டுகள் வெளியாகும் நிலையில் உண்மையில் சம்பிக்க ரணவக்க குற்றம் செய்திருப்பின் அவர் மீது சட்டம் முறையான நடவடிக்கையெடுக்குமென பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போது சம்பிக்க விடயத்தில் பொலிஸார் நடவடிக்கையெடுக்காது இருப்பத தொடர்பாக ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சட்டம் சகலருக்கும் சமம். இதன்படி அமைச்சராக இருந்தாலும் சரி சாதாரண பொது மகனாக இருந்தாலும் சரி சட்டம் தனது கடமையை சரியாக செய்யும். இது தொடர்பாக முறையான விசாரணை நடத்தி அதில் அவர் தொடர்புபட்டுள்ளமை உறுதியானால் பொலிஸார் அவரை கைது செய்வர். என சுஜீவ தெரிவித்துள்ளார்.
n10




