செய்திகள்

சம்பூரில் அனல்மின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அடையாள உண்ணாவிரதப் போராட்டம்

சம்பூரில் அனல்மின் நிலையமொன்றை அமைக்க வேண்டாம் என வலியுறுத்தி மக்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கட்டைபறிச்சான் பாலையூர் பிள்ளையார் கோயிலுக்கு முன்பாக இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கூனித்தீவு, கட்டைப்பறிச்சான் ,சேனையூர், சூடக்குடா , கடற்கரைசேனை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

சம்பூர் அனல் மின் நிலையத்தினால் தமது அன்றாட செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

n10