செய்திகள்
சம்பூர் திட்டம் கைவிடப்பட்டுள்ளதால் மின்சார நெருக்கடி வருமாம்
சம்பூர் அனல் மின்நிலைய திட்டத்தை நிறுத்த தீர்மானித்துள்ளமையினால் நாட்டின் மின்சார துறையில் பாரிய நெருக்கடி நிலைமை ஏற்படக்கூடுமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இந்த தீர்மானத்தால் நாட்டுக்கு கிடைக்கவிருந்த 500 மெகாவற் மின்சாரம் கிடைக்காமல் போகுமேன அந்த சபை சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறாயினும் அனல் மின்நிலையத்திற்கு பதிலாக வேறு மின் உற்பத்திக்காவது செல்ல வேண்டுமெனவும் அந்த சபை சுட்டிக்காட்டியுள்ளது. -(3)




