சம்பூர் மின்உலை “மாற்றம்’ தொடர்பாக இன்னமும் பேச்சு ஆரம்பமாகவில்லை
கிழக்கிலங்கையின் சம்பூர் பகுதியில் உத்தேச 500 மெகாவோர்ட் மின்னுலையை திரவ இயற்கை வாயு உலையாக மாற்றுவது தொடர்பாக இந்திய இலங்கை அதிகாரிகள் கலந்துரையாடவுள்ளனர். இது தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் தனது அதிகாரிகளைப் பேசுமாறு தான் கேட்டுக் கொள்வாரென மே மாத நடுப்பகுதியில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதிமொழி அளித்திருந்த போதிலும் இன்னமும் இது தொடர்பாக கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படவில்லை. நிலக்கரியை மூலப்பொருளாகக் கொண்ட அனல் மின் உலை பணிகள் நிறுத்தப்பட்டிருப்பதாக செவ்வாய்க்கிழமை தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
அதேவேளை திரவமயப்படுத்தப்பட்ட இயற்கை வாயு உலைக்கு மாற்றுவது தொடர்பான கலந்துரையாடல்களை இந்தியத் தரப்போ அல்லது இலங்கைத் தரப்போ ஆரம்பிப்பதற்கான முன்னகர்வுகள் எதுவும் இடம்பெறவில்லை. டில்லியிலும் கொழும்பிலுமுள்ள அரசியல் உயர்மட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ள அதேவேளை, இலங்கையின் யோசனை கனதியான தன்மை தொடர்பாக இந்திய அதிகாரிகள் ஐயுறவைக் கொண்டவர்களாக இருக்கின்றனர்.
திரவ மயப்படுத்தப்பட்ட இயற்கை வாயு மின்னுலையானது அதிகளவு செலவு கூடியதாக அமையுமென அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தற்போதைய தருணத்தில் சர்வதேச எரிபொருள் விலை ஆகக் குறைந்த மட்டத்தில் இருக்கின்றது. ஆனால், திரவ மயப்படுத்தப்பட்ட இயற்கை வாயுவை அடிப்படையாகக் கொண்ட மின்னுலையை அமைக்கும் போது எண்ணெய் விலை அதிகளவுக்கு அதிகரிக்கக்கூடும். ஏனெனில், இயற்கை வாயு உலை பொருளாதார ரீதியாக ஏற்புடையதாகக் காணப்படவில்லை. அத்துடன் இதற்கு நுகர்வோருக்கு அதிகளவுக்கு மானிய உதவி வழங்கப்பட வேண்டி நேரிடும். பாரிய திரவமயப்படுத்தப்பட்ட இயற்கை வாயு நிலையத்தை அமைப்பதற்கு இலங்கை சந்தை அதிகளவு
சிறியதாகக் காணப்படுகிறது. சிறியளவு நிலையங்களை அமைப்பதற்கான சாத்தியப்பாடு இருந்தாலும் கூட சந்தையைப் பொறுத்தவரை இது மிகவும் சிறியதாகும். அத்துடன், பொருளாதார ரீதியாக அந்த உலையை சம்பூரில் வைத்திருப்பதும்
சாத்தியப்பாடற்றதாகக் காணப்படுகிறது. ஆனால் மேற்காசிய எண்ணெய் வயல்களுக்கு சமீபமாக இலங்கையின் மேற்குக் கரையே அமைந்திருக்கிறது. அதனால் மேற்குக் கரையில் மின்னுலையை மீள அமைப்பதற்கான தேவைப்பாடு காணப்படுகிறது.
நிலக்கரியை அடிப்படையாகக் கொண்ட உலையை அமைப்பதற்காகவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது. சம்பூர் அனல் மின் உலை தொடர்பான சகல உடன்பாடுகள் யாவும் திரவ மயப்படுத்தப்பட்ட இயற்கை வாயு உலையை நிர்மாணிப்பதற்கு ஏற்புடையதாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. அத்துடன், சம்பூர் மின் உலை தொடர்பான சகல உடன்பாடுகளும் பல வருடங்களாக பேச்சுவார்த்தை மூலம் மேற்கொள்ளப்பட்டவையாகும்.
இந்த விடயத்தில் மீள பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டிய தேவைப்பாடு காணப்படுகிறது. மிகவும் வலிமையுடன் பேசப்பட்ட விடயமாக இது அமைந்திருக்கிறது. அத்துடன் பல விடயங்கள் தொடர்பாக இணக்கப்பாட்டிற்கு வர வேண்டிய தேவைப்பாடும் காணப்படுகிறது. எவ்வாறாயினும் இதற்கு பல வருடங்கள் எடுக்கும். திரவமயப்படுத்தப்பட்ட இயற்கை வாயுவுக்கு மாறுவது தொடர்பாக அரசியல் ரீதியான தீர்மானமொன்று எடுக்கப்பட்டால் இந்தியாவின் தேசிய அனல் சக்தி கூட்டுத்தாபனத்திற்கு இதனைச் செய்யுமாறு கூறப்படும். இந்தியாவில் திரவமயப்படுத்தப்பட்ட இயற்கை வாயு உலையை இந்தியாவின் தேசிய அனல் சக்தி கூட்டுத்தாபனம் நிர்மாணித்திருந்தது.
இலங்கை அரசாங்கம் மின்னுலையை நிர்மாணிப்பது தொடர்பாக அச்சத்துடனான வேகத்தைக் கொண்டிருக்கவில்லை. அல்லது மின்சாரத்துக்கான அதிக தேவைப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை. தற்போது நாள் முழுவதும் மின் விநியோகத்தை 100% உறுதிப்படுத்தக்கூடியதாக இருக்கின்றது. ஆனால் வெளிநாட்டு முதலீடுகளை கவர்ந்திழுப்பதற்கு அரசாங்கம் திட்டமிடுமானால் கொழும்பு துறைமுக நகரம் மற்றும் மேல் மாகாண மெகாபொலிஷ் போன்ற பாரிய திட்டங்களை கொண்டிருக்க வேண்டுமென்று இந்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இலங்கை இதற்குத் தயாராக இருக்கவேண்டியுள்ளது. நிலக்கரி உட்பட கலப்பு எரிபொருட்கள் பற்றிச் சிந்திப்பதற்கு இலங்கை தயாராக இருக்க வேண்டும். ஏனெனில் நிலக்கரி மூலமான அனல் மின் உலை அதிகளவுக்கு மலிவானதாகவும் தொடர்ச்சியாகக் கிடைக்கக் கூடியதாகவும் இருந்து வருகிறது. சூரிய ஒளி அல்லது காற்று போன்றல்லாமல் இவை மலிவான விலையில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக காணப்படுகின்றது.
அணு சக்தியை முழுமையாக நிராகரித்தமையினால் இலங்கையில் நிலக்கரியின் முக்கியத்துவம் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. ஆனால் ராஜபக்ஷ அரசாங்கத்தைத் தவிர இலங்கை அரசாங்கங்கள் யாவும் சுற்றாடல் தொடர்பாக அதிகளவு பிரக்ஞையை கொண்டிருக்கின்றன. நுரைச்சோலையில் இலங்கையின் முதலாவது நிலக்கரி மூலமான மின்சார உற்பத்தி ராஜபக்ஷ அதிகாரத்திற்கு வரும் வரை காத்திருக்க நேரிட்டது. அவர் இந்திய இலங்கை கூட்டு முயற்சி மின் உலையையும் ஜப்பானின் நிதியுதவியுடனான நிலக்கரி மின் உலை திட்டத்தையும் சம்பூரில் ஆரம்பித்திருந்தார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்




