செய்திகள்

சரண்யாமோகனுக்கு ஆண்குழந்தை!!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘காதலுக்கு மரியாதை’ படத்தில் சரண்யா மோகன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அதன்பிறகு கதாநாயகியாக உயர்ந்தவர். நடிகை சரண்யாமோகன்.

கேரளாவை சேர்ந்த அவர் ஏராளமான தமிழ் படங்களிலும் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களிலும் நடித்தார்.

‘யாரடி நீ மோகினி’, ‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘வேலாயுதம்’, ‘அழகர்சாமியின் குதிரை’ போன்ற படங்கள் சரண்யாமோகனின் நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தியது.

குடும்பபாங்கான வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த சரண்யாமோகன் கடந்த 2015ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தை சேர்ந்த அரவிந்த் கிருஷ்ணன் என்ற டாக்டரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு சினிமாவிற்கு விடை கொடுத்த சரண்யா, தற்போது கேரளாவில் உள்ள வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்ததாகவும், தாயும், சேயும் நலமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

N5