செய்திகள்

சரத் பொன்சேகாவின் நியமனம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலின் ஊடாக, நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவின் நியமனம் சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவொன்று இன்று வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகாவின் நியமனம் மற்றும் அந்த பதவியிலிருப்பது சட்டவிரோதமானது என்றும், அப்பதவியில் தொடர்ந்திருந்து செயற்படுவதை தடுக்குமாறு இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கோரியே இந்த மனு,  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.