செய்திகள்

சரத் வீரசேகரவுக்கு எதிராக வடக்கு, கிழக்கில் சட்டத்தரணிகள் போராட்டம்!

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் நீதித்துறைக்கு அச்சுறுத்தலை விடும் வகையில் பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டிருந்தமைக்கு எதிராக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முல்லைத்தீவு, குருந்தூர்மலையில் தமிழ் பௌத்த வழிபாட்டு எச்சங்களின் மீது, சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள சிங்கள பௌத்த கட்டுமானங்களை பார்வையிட முல்லைத்தீவு நீதிபதி ரி. சரவணராஜா அண்மையில் சென்றிருந்தார்.

அப்போது தனது குழுவினருடன் அங்கு வந்திருந்த பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேக, தேவையில்லாமல் மூக்கை நுழைத்து வாங்கிக் கட்டினார்.
அரசியல்வாதிகள் நீதிமன்ற விசாரணையில் மூக்கை நுழைக்க கூடாது என எச்சரித்து வீரசேகரவை அங்கிருந்து அகற்றினார்.

இதனால் கொதிப்படைந்த வீரசேகர அண்மையில் பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி, நீதித்துறையிலுள்ள தமிழர்களிற்கு மிரட்டல் விடுக்கும் பாணியில் பேசியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் விலகியிருக்க யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் சட்டத்தரணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

-(3)