செய்திகள்

சர்­வ­தேச சட்­டங்­களை மீறி போரிட அரச படை­க­ளுக்கு அனு­ம­தி­யுள்­ளது : பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ்

விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போரில் சர்­வ­தேச சட்­டங்கள் மீறப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது. ஆனால், மக்­களின் பாது­காப்பை கருத்தில் கொண்டு அந்த சட்ட மீறல்­களை பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு எதி­ராக பிர­யோ­கிக்க அரச படை­க­ளுக்கு அனு­ம­தி­யுள்­ளது என முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்சர் பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரி­வித்தார்.

அத­ன­டிப்­ப­டையில் இலங்கை இரா­ணுவம் பணயக் கைதி­க­ளாக வைக்­கப்­பட்­டி­ருந்த மக்­களை மீட்கும் நோக்கில் விடு­தலை புலி­க­ளுக்கு எதி­ராக போரிட்­ட­மை­யா­னது எந்­த­வொரு விதத்­திலும் சர்­வ­தேச சட்­டங்­களை மீறும் செய­லாக அமை­யாது எனவும் அவர் குறிப்­பிட்டார்.

பத்­த­ர­முல்லை நெலும் மாவத்­தையில் அமைந்­துள்ள மஹிந்த ராஜ­ப­க்ஷவின் அலு­வ­ல­கத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்­பெற்ற கூட்டு எதிர்க் கட்­சியின் செய்­தி­யாளர் மாநாட்­டி­லேயே மேற்­கண்­ட­வாறு பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

ஐக்­கிய நாடுகள் விவ­கா­ரத்தில் அர­சாங்கம் செயற்­பட்ட விதத்­தி­லேயே பாரிய நெருக்­கடி நிலை உள்­ளது. விடு­தலை புலிகள் செய்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்­றங்கள் தொடர்பில் யாரும் எதுவும் பேசு­வ­தில்லை. ஆனால் இரா­ணுவம் குற்­றங்கள் செய்­த­தாக போலி­யான சாட்சி ஆதா­ரங்­களை முன் வைத்து அனைத்தும் நடை­பெ­று­கின்­றன. பொது மக்­களை பணயக் கைதி­க­ளாக வைத்துக் கொண்டு இறு­திக்­கட்ட போரில் விடு­தலை புலிகள் மோச­மான முறையில் போரிட்­டனர்.

அது முழு உல­கிற்கும் தெரியும். ஆனால் இந்த மக்­களை மீட்­ப­தற்­காக மனி­தா­பி­மான நட­வ­டிக்­கையை ஆரம்­பித்து இரா­ணுவம் செயற்­பட்­டது. இதன் பிர­காரம் பல இலட்சம் மக்கள் இரா­ணுவ கட்­டுப்­பாட்­டிற்குள் வந்­தனர். சர்­வ­தேச சட்­டத்தின் பிர­காரம் பணயக் கைதி­க­ளாக உள்ள மக்­களை மீட்­ப­தற்கு எந்­த­வொரு விதி முறை­யையும் மீற முடியும். இதுவே தர்­ம­மு­மாகும். நாம் ஆட்­சியில் இருந்­தி­ருந்தால் இந்த விதி­வி­ளக்கை மைய­மாக வைத்து இரா­ணு­வத்­திற்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்­களை நீக்­கி­யி­ருப்போம்.

ஆனால், தற்­போது என்ன நடந்­துள்­ளது. பார­தூ­ர­மான மனித உரிமை மீறல்­களை இரா­ணுவம் செய்­துள்­ள­தாக ஒப்­புக்­கொண்டு அதனை விசா­ரணை செய்­வ­தாக கூறி ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திட்­டுள்­ளனர். இதனால் பல்­வேறு நெருக்­க­டி­யான நிலையே எமக்கு ஏற்­பட்­டுள்­ளது. புலி பயங்கரவாதியை கொலை செய்ததற்காக 20 இலட்சம் ரூபாவை இராணுவ வீரர் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் புலிகளால் கொலை செய்யப்பட்ட இராணுவ குடும்பங்களுக்கு ஒன்றும் இல்லாத நிலையே காணப்படுகின்றது என்றார்.
-06