செய்திகள்

சர்­வ­தேச பங்­கேற்பை அந்­நிய தலை­யீ­டாக கருதக் ­கூ­டாது

– கலா­நிதி ஜெகான் பெரேரா –

இலங்­கையின் நிலை­மாற்­றுக்­கால நீதிச் செயன்­மு­றை­களில் சர்­வ­தேச பங்­கேற்பு தொடர்­பான விவ­காரம் தொடர்ந்தும் ஊகத்­துக்­கு­ரி­ய­தொன்­றா­கவே இருந்து வரு­கி­றது. அர­சாங்­கத்­த­ரப்பில் வெவ்­வேறு உறுப்­பி­னர்கள் வெவ்­வேறு கருத்­துக்­களை வெளி­யிட்டுக் கொண்­டி­ருக்­கி­றார்கள். ஆனால் முன்னாள் இரா­ணு­வத்­த­ள­பதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா கடந்­த­ வாரம் பாரா­ளு­மன்­றத்தில் நிகழ்த்­திய கன்னிப் பேச்சின் விளை­வாக உள்­நாட்டுப் போரின் இறுதிக் கட்­டத்தில் நடந்­தவை பற்­றிய உண்­மையை உறு­திப்­ப­டுத்­திக்­கொள்­வதில் சர்­வ­தேச சமூ­கத்­திற்கு பங்­கொன்று இருக்­க­வேண்­டு­மென்ற கோரிக்­கைக்­கான ஆத­ரவு அதி­க­ரித்­தி­ருக்­கி­றது.

ஒரு அரசு என்­ற­வ­கையில் இலங்­கையின் சுயா­தி­பத்­தியம் மற்றும் ஐக்­கி­யத்­துக்­கா­க ­பா­டு­பட்­டவர் என்று பொன்­சே­கா­வுக்கு இருக்­கக்­கூ­டிய சான்று ஆதா­ரங்­களை அவரின் அர­சியல் எதி­ரிகள் கூட நிரா­க­ரிக்க முடி­யாது. முன்­னைய ஒரு கால­கட்­டத்தில் ஏற்­பட்­டி­ருந்த இரா­ணுவத் தோல்­வி­களை மாற்­றி­ய­மைத்து முன்­ன­ரங்­கத்தில் நின்று தலைமை தாங்­கி­யதன் மூல­மாக இரா­ணுவ வெற்­றியைச் சாதித்துக்காட்­டி­யவர் அவர். போரின் இறுதிக் கட்­டத்தில் போர்க்­குற்­றங்கள் இழைக்­கப்­பட்­ட­னவா என்­பதைக் கண்­ட­றி­வ­தற்­கான எந்­த­வொரு விசா­ர­ணை­யிலும் வெளி­நாட்டு அவ­தா­னிகள் பங்­கேற்­ப­தற்கு அனு­ம­திக்­கப்­பட வேண்­டு­மென்று முன்னாள் இரா­ணு­வத்­த­ள­பதி பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­று­கையில் குறிப்­பிட்டார்.

கடந்த அர­சாங்க காலத்தில் இதன் தலை­வர்­களின் செயற்­பா­டு­க­ளினால் முன்னாள் இரா­ணு­வத்­த­ள­பதி பெரிதும் பாதிக்­கப்­பட்­டி­ருந்தார். அதி­காரம் மீதான தங்­களின் ஏக­போ­கத்­துக்கு ஒரு அச்­சு­றுத்­த­லாக வரக்­கூ­டி­ய­வ­ராக பொன்­சே­காவை அந்­தத்­த­லை­வர்கள் நோக்­கி­னார்கள். மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவுசெய்­யப்­பட்ட பின்னர் முன்னாள் இரா­ணுவத் தள­ப­திக்கு அர­சியல் பழி­வாங்­க­லுக்­காக நிவா­ர­ண­ம­ளிக்­கப்­பட்­டது. இரா­ணு­வத்தின் ஜெனரல் என்ற தரத்­தி­லி­ருந்து பீல்ட் மார்ஷல் என்ற தரத்­துக்கு அவர் பதவி உயர்த்­தப்­பட்டார். தேசிய ஐக்­கிய அர­சாங்கம் அமைக்­கப்­ப­டு­வ­தற்கு வழி­வ­குத்த பொதுத் தேர்­த­லுக்குப் பிறகு தேசியப்பட்­டி­யலின் மூல­மாக பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக நிய­மிக்­கப்­பட்ட அவ­ருக்கு அமைச்சர் பத­வியும் கொடுக்­கப்­பட்­டது.

முன்­னைய அர­சாங்­கத்தில் தீர்­மா­னங்­களை எடுக்கும் அதி­காரப்பொறுப்பில் இருந்­த­வர்கள் போரின் இறுதிக் கட்­டத்தில் இரா­ணுவ நட­வ­டிக்கைக் கடமைப் பொறுப்­பு­க்களில் இருந்து தன்னை வில­கு­மாறு கேட்டுக்கொண்­ட­துடன் இரா­ணுவ நட­வ­டிக்­கை­களைக் கையாளும் பொறுப்பை அர­சியல் அதி­காரப் பத­வி­களில் இருந்­த­வர்­க­ளுக்கு கொடுத்­தார்கள். சட்­டங்­களை எவ­ரா­வது மீறி­னார்கள் என்றால் விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு அவர்­க­ளுக்கு தண்­டனை வழங்­கப்­பட வேண்டும் என்று தனது கன்னிப்பேச்சில் பொன்­சேகா கூறினார்.

போரின் முடி­வுக்­கட்­டங்­களில் குடி­மக்கள் வகை­தொ­கை­யின்றி கண்­மூ­டித்­த­ன­மாகக் கொல்­லப்­பட்­டதன் விளை­வா­க வும் இலங்கை இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்த விடு­த­லை­ப் பு­லிகள் இயக்கத் தலை­வர்­களும் அவர்­களின் குடும்­பத்­த­வர்­களும் வேண்­டு­மென்றே கொல்­லப்­பட்­டதன் விளை­வா­கவும் போர்க் குற்­றங்கள் இழைக்­கப்­பட்­ட­னவா என்­பதைக் கண்­ட­றிய விசா­ர­ணைகள் நடத்­தப்­பட வேண்­டு­மென்று 2009 மே மாதத்­திற்குப் பிறகு இலங்கை அர­சாங்கம் மீது தீவிர நெருக்­கு­தல்கள் பிர­யோ­கிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருந்­தன. அர­சாங்­கத்தின் இணை அனு­ச­ர­ணை­யுடன் ஜெனீ­வாவில் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தில் சர்­வ­தேச பங்­கேற்­புக்கு இணங்கிக் கொள்­ளப்­பட்­ட­தற்குக் கடு­மை­யான எதிர்ப்­புக்கள் கிளம்­பி­யி­ருந்­தன.

தனது தலை­மைத்­து­வத்தின் கீழ் இரா­ணுவம் சர்­வ­தேச சட்­டங்­க­ளுக்கு இசை­வான முறை­யி­லேயே போரை முன்­னெ­டுத்­தது என்று பீல்ட் மார்ஷல் பொன்­சேகா பாரா­ளு­மன்­றத்தில் கூறி­யி­ருக்­கிறார். ஆனால் சர்­வ­தேச சட்ட மீறல்கள் ஏதா­வது இடம்­பெற்­றி­ருக்­கின்­றனவா? இல்­லையா என்­பதை அவ­தா­னிப்­ப­தற்கு விசா­ர­ணை­களில் சர்­வ­தேச அவ­தா­னிகள் பங்­கேற்க அனு­ம­திக்­கப்­பட வேண்டும் என்றும் அவர் கூறினார். விசா­ர­ணையில் சர்­வ­தேச அவ­தா­னிகள் பங்­கேற்­பது குறித்து பொன்­சேகா பேசி­னாரே தவிர வெளி­நாட்டு நீதி­ப­திகள் அல்­லது வழக்குத் தொடு­நர்கள் பங்­கேற்­பது குறித்து அவர் பேச­வில்லை என்­பது முக்­கி­ய­மாகக் கவ­னிக்­கப்­பட வேண்­டிய விட­ய­மாகும். வெளி­நாட்டு நீதி­ப­திகள், வெளி­நாட்டு வழக்குத் தொடு­நர்களின் பங்­கேற்பு என்­பது பெரும் சர்ச்­சைக்­கு­ரிய விவ­கா­ர­மாகும்.

புத்­த­கங்­களில் வெளி­யான தக­வல்கள்

இலங்­கையின் சமா­தான முயற்­சி­க­ளுக்கு ஆத­ர­வ­ளித்த வெளி­நா­டு­களின் தலை­வர்­க­ளுடன் தொடர்­பு­கொண்டு விப­ரங்­களை அறிந்த பிறகு போரின் இறுதிக் கட்­டங்கள் பற்­றிய உண்­மை­களை அதிலும் குறிப்­பாக இலங்கை இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்த விடு­தலைப்புலிகள் இயக்கத் தலை­வர்கள் சம்­பந்­தப்­பட்ட ‘வெள்ளைக்கொடி’ விவ­காரம் பற்­றிய உண்­மை­களை, வெளி­யிடப் போவ­தா­கவும் பாரா­ளு­மன்­றத்தில் பீல்ட்­மார்ஷல் பொன்­சேகா குறிப்­பிட்டார். புத்­தகம் ஒன்றை எழுதும் பணியில் ஈடு­பட்­டி­ருப்­ப­தா­கவும் சர்­வ­தேச சமூ­கத்தின் சில பிரி­வி­ன­ருக்கு தெரிந்தவகை­யிலும் அடிக்­கடி அவர்­களின் கூட்­டுப்­பங்­கேற்­பு­டனும் இறுதிக்கட்­டங்­களில் போரை அர­சாங்கம் எவ்­வாறு நடத்­தி­யது என்­பது பற்­றிய மேலும் கூடு­த­லான தக­வல்கள் அந்தப் புத்­த­கத்தில் இருக்கும் என்றும் அவர் கூறினார். சில­வே­ளை­களில் வர­லாற்­றா­சி­ரி­யர்­களும் தங்­க­ளது தனிப்­பட்ட அனு­ப­வங்­களைப் பற்றி எழு­து­கின்­ற­வர்­களும் ஒரு நாட்டின் வர­லாற்றின் பாது­கா­வ­லர்­க­ளாக இருக்­கி­றார்கள் என்­ப­துடன் அவர்­க­ளது கருத்­துக்கள், நிலை­வ­ரங்கள் பற்றி கூடு­த­லான அள­வுக்கு முழு­மை­யான பார்­வையை தரக்­கூ­டி­ய­ன­வாக அமையும்.

இத்­த­கை­ய­தொரு பின்­பு­லத்­திலே இம்­மாத ஆரம்­பத்தில் வெளி­யி­டப்­பட்ட புத்­த­க­மொன்று கவ­னத்தை ஈர்த்­தி­ருக்­கி­றது. முன்னாள் இரா­ணு­வத்­த­ள­பதி பாரா­ளு­மன்­றத்தில் நிகழ்த்­திய கன்­னிப்­பேச்சின் மையப்­பொ­ரு­ளாக அமைந்த ‘போரின் இறுதிக் கட்­டங்கள்’ பற்­றிய சர்­வ­தேச நோக்கைத் தரு­வ­தாக அந்தப் புத்­தகம் அமைந்­தி­ருக்­கி­றது. பி.பி.சி.யின் முன்னாள் செய்­தி­யா­ளரும் பின்னர் சர்­வ­தேச சமா­தானச் செயன்­மு­றை­களை ஊக்­கு­விக்கும் அமைப்­பான சுவீடனைத் தளமாகக் கொண்ட ‘International IDEA’ வின் ஆராய்ச்­சி­யா­ள­ராகப் பணி­யாற்­றி­ய­வ­ரு­மான மார்க் சோல்ரர் எழு­திய ‘To End a Civil War’ என்­பதே அந்தப் புத்­த­க­மாகும். 550 பக்­கங்­களைக் கொண்ட புத்­தகம் இலங்­கையின் இறு­தி­யா­னதும் பெரு­ம­ள­வுக்கு நம்­பிக்­கை­யூட்டும் வகையில் அமைந்­தி­ருந்­த­து­மான சமா­தான முயற்­சி­களில் நோர்வே எவ்­வாறு சம்­பந்­தப்­பட்­டது என்­பதை மிகவும் உன்­னிப்­பான முறையில் தொகுத்துத் தந்­தி­ருக்­கி­றது. வெள்ளைக் கொடி விவ­காரம் உட்­பட போரின் இறுதிக் கட்­டங்­களில் இருந்து எழுந்த பிரச்­சி­னை­க­ளையும் அந்த புத்­தகம் விளக்­கு­கி­றது. போரின் இறுதி நாட்­களில் முன்­ன­ரங்­கத்தில் நின்று செயற்­பட்­ட­வர்­க­ளினால் வழங்­கப்­பட்ட பெரு­வாரி­யான நேர்­கா­ணல்­களும் அதில் அடங்­கி­யி­ருக்­கின்­றன.

போர்க்­கா­ல­கட்­டத்­திலும் போரின் முடி­வுக்குப் பின்னர் நல்­லி­ணக்கச் செயன்­முறை­க­ளுக்கு ஆத­ரவுத் தெரி­விப்­ப­தற்­கா­கவும் இரு­பது தட­வை­க­ளுக்கு மேல் இலங்­கைக்கு விஜயம் செய்த ஜப்­பானின் சமா­தானத் தூதுவர் யசூசி அகாசி மார்க் சொல்­ரரின் புத்­தகம் பற்றித் தெரி­வித்த கருத்தில் பின்­வ­ரு­மாறு குறிப்­பிட்­டி­ருக்­கிறார்:

எளிதில் கையாள முடி­யாத இந்த அனு­ப­வங்­களில் இருந்து நாமெல்­லோரும் கற்கவேண்­டிய அறிவுத் தெளி­வு­டைய பாட­மென்­ன­வென்றால் இந்த (சமா­தான) முயற்­சி­களின் இறுதிவிளைவு சமா­தான செயற்­பாட்­டா­ளர்­களின் கட்­டுப்­பாட்­டுக்கு அப்­பாற்­பட்ட அர­சியல் சூழ்­நி­லை­க­ளி­லேயே தங்­கி­யி­ருக்­கி­றது.

ஆனால், இலங்­கையில் நோர்­வேயின் சமா­தான அனு­ச­ரணை முயற்­சியின் தாக்கம் 2006 ஆம் ஆண்டில் போர் நிறுத்த உடன்­ப­டிக்கை வீழ்ச்சிகண்ட பின்­னரும் நீடித்­த­தாக இருந்­தது. நோர்­வேயின் அனு­ச­ர­ணை­யு­ட­னான சமா­தான முயற்­சியை சர்­வ­தேச சமூ­கத்தின் செல்­வாக்கு மிக்க உறுப்பு நாடுகள் ஆத­ரித்­தன. அமெ­ரிக்கா, ஜப்பான், ஐரோப்­பிய ஒன்­றியம் ஆகி­யன இணைத் தலைமை நாடு­க­ளாக இருந்­தன. போர் நிறுத்த உடன்­ப­டிக்கைக் கால­கட்­டத்தின் போது முக்­கி­யத்­துவம் பெற்ற ஆக்­க­பூர்­வ­மான சர்­வ­தேச ஈடு­பாட்டின் மரபுப் போர் முடிந்த பின்­னரும் தொடர்ந்­தது. இன்றும் கூட நீடித்து நிலைக்­கி­றது.

நிலை­பேறான தாக்கம்

முதலில் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவின் அழைப்பின் பேரில் 2000 ஆம் ஆண்­டுக்கு முன்­ன­ரான கால­கட்­டத்தில் தொடங்­கப்­பட்ட நோர்­வேயின் அனு­ச­ரணை முயற்சி இலங்கை அர­சாங்­கத்­துக்கும் விடு­தலைப் புலி­க­ளுக்கும் இடை­யி­லான போர் நிறுத்த உடன்­ப­டிக்கை கைச்­சாத்­தி­டப்­பட்ட 2002 ஆம் ஆண்டில் அதன் உச்ச நிலையை அடைந்­தது. அது பரஸ்­பரம் ஏற்­பு­டை­ய­தான தீர்­வொன்றை எட்­டு­வ­தற்­கான சிறந்­த­வாய்ப்பை நாட்­டுக்குக் கொடுத்­தது. 2002 பிற்­ப­கு­தியில் செய்­யப்­பட்ட ஒஸ்லோ பிர­க­டனம் அதன் உச்சநிலை­யாக அமைந்­தது. அந்தப் பிர­க­ட­னத்தில் இன முரண்­நிலைக்­கான மூலவேர்க் கார­ணி­களை கையா­ளு­வ­தற்கு, சமஷ்டித் தீர்­வொன்றை ஆராய்­வ­தற்கு அர­சாங்­கமும் விடு­தலைப் புலி­களும் இணங்கிக் கொண்­டனர். இன்றும் கூட நியா­ய­மான அர­சியல் தீர்­வொன்றின் உருவரைபு அதி­கா­ரப்­பகிர்வின் சமஷ்டி ஏற்­பா­டு­களின் செயற்­பாட்டு எல்­லை­க­ளுக்­குள்­ளேயே தங்­கி­யி­ருக்­கின்­றது. அதில் பல்­லின சமு­தா­ய­மொன்றில் நிரந்­தர சிறு­பான்­மை­யி­ன­ராக இருக்க விதி­வ­ச­மாக்­கப்­பட்­ட­வர்­களின் நோக்கில் இருந்­து­ பார்க்கும்போது ஒரு சமூ­கத்தின் சனத்­தொகை மேலாண்மை பெரும்­பான்­மை­யி­னரின் நிரந்­தர கொடுங்­கோன்­மை­யாக வந்து விடு­வ­தில்லை.

இலங்­கையின் நிலை­மாற்­றுக்­கால நீதிச் செயன்­மு­றை­களில் சர்­வ­தேச பங்­கேற்பு சம்­பந்­தப்­பட்ட இன்­றைய விவ­காரம் இலங்­கையில் நோர்­வேயின் சமா­தான ஈடு­பாட்டின் விளை­வு­களில் ஒன்­றாகும். அதுவே தங்­க­ளது பிரச்­சி­னை­க­ளுக்கு நியா­ய­மான அர­சியல் தீர்­வொன்று இருக்க முடியும் என்ற நம்­பிக்­கையை தொடர்ந்தும் தமிழ் மக்­க­ளுக்கு கொடுத்துக்கொண்­டி­ருக்­கி­றது. அர­சாங்­கத்­துக்கும் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கும் இடை­யி­லான சமா­தான முயற்­சி­களின் போது சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான அதி­காரப்பகிர்வு ஏற்­பா­டொன்று தொடர்­பான ஒஸ்லோ பிர­க­ட­னத்­தை­ய­டுத்து நியா­ய­மான அர­சியல் தீர்­வொன்று தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்­கான விசேட வாய்ப்­பொன்று கிடைக்­கப்­பெற்­றது.

நீண்­ட­காலப் போரினால் சலிப்­ப­டைந்த இலங்கை சனத்­தொ­கையில் பெரும்­பா­லா­ன­வர்கள் சமஷ்டித் தீர்­வொன்று போரை முடி­வுக்குக் கொண்­டு­வ­ரு­மானால், அத்­த­கைய தீர்வை ஏற்க தயா­ரா­யி­ருத்­தி­ருந்­தார்கள் என்­பது அபிப்­பி­ராய வாக்­கெ­டுப்­புக்­களின் மூல­மாக உறுதிசெய்­யப்­பட்­டது. விடு­தலைப் புலி­க­ளுக்கு இருந்த இரா­ணுவ வல்­லமை இலங்கை அர­சுக்கு இருப்­ப­தை­யொத்த பேரம் பேசும் சக்­தியை தமிழ் அர­சியல் சமு­தா­யத்­துக்குக் கொடுத்­தது. அதன் விளைவே ஒஸ்லோ உடன்­ப­டிக்­கை­யாகும்.

ஆனால் விடு­தலைப்புலிகள் அடைந்த இரா­ணுவ ரீதி­யான தோல்வி அர­சியல் அதி­கா­ரத்தில் ஒரு சமச்­சீ­ரின்­மையைக் கொண்டு வந்­தது. அது சமஷ்டி நோக்கில் இருந்து பின்­வாங்­க­லுக்கு வழி­வ­குத்­தது மாத்­தி­ர­மல்ல, அதி­காரப்பர­வ­லாக்­கத்தைப் பொறுத்­த­வரை அர­சி­ய­ல­மைப்­புக்­கான 13ஆவது திருத்­தத்தின் வாயி­லாக வழங்­கப்­ப­டு­கின்­ற­வற்றைக் காப்­பாற்­று­வ­தற்குக் கூட தற்­காப்பு ரீதி­யாகப் போராட வேண்­டி­ய­தொரு நிலையை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது. அர­சியல் கட்­ட­மைப்பு ஒன்று நடை­முறையில் இருக்கவேண்­டி­யது அவ­சியம் என்­பதே நோர்­வேயின் அனு­ப­வத்­தி­லி­ருந்து பெறப்­பட்ட படிப்­பி­னை­களில் ஒன்­றாகும். அர­சி­ய­லை­மைப்புச் சீர்­தி­ருத்தச் செயன்­முறையின் ஊடாக இதைச் செய்­வ­தற்கே அர­சாங்கம் நாட்டம் கொண்­டி­ருக்­கி­றது.

நாட்டின் சகல பகு­தி­க­ளிலும் இருந்து வந்த சிவில் சமூகப் பிர­தி­நி­தி­க­ளுடன் கடந்­த­வாரம் நடத்­தப்­பட்ட சமா­தான செயன்­முறை தொடர்­பான கலந்­து­ரை­யா­ட­லொன்றில் பிரச்­சி­னைகள் குறித்து ஆழ­மாக ஆராய்­வ­தற்­காக பங்­கேற்­பா­ளர்கள் பல சிறிய குழுக்­க­ளாகப் பிரிக்­க­பட்­டுள்­ளனர். பிர­தா­ன­மாக வடக்கு, கிழக்கில் இருந்து வந்த தமிழ் பேசும் குழு­வினர் தற்­போ­தைய நிலை­மாற்­றுக்­கால நீதிச் செயன்­மு­றைகள் வெற்­றி­ய­ளிக்­குமா என்­பதில் தனிப்­பட்­ட­மு­றையில் சந்­தே­கங்­களை வெளி­யிட்­டனர். இது எதிர்­பார்க்­கப்­பட வேண்­டி­யதே. சீர்­திருத்தம் மற்றும் நல்­லி­ணக்­கத்தை நோக்­கிய முன்­னைய முயற்­சிகள் பய­னற்றுப் போனதை அவர்கள் கண்­டி­ருக்­கி­றார்கள். எண்­ணிக்­கையில் நிரந்­தர சிறு­பான்­மை­யினர் என்ற வகையில் அவர்கள் தங்­க­ளது பேரம் பேசல் பலத்தில் இருக்­கின்ற சமச்­சீ­ரின்­மையைக் குறைக்­கக்­கூ­டிய வேறு கார­ணி­களை அவர்கள் கொண்­டி­ருக்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். சர்­வ­தேச பங்­கேற்­புடன் சம்­பந்­தப்­பட்ட விவ­கா­ரத்தை தேசிய சுயா­தி­பத்­தி­யத்தை அரித்துச் செல்­லக்­கூ­டிய ஒரு அந்­நியத் தலை­யீ­டாக நோக்­கக்­கூ­டாது; இது அந்­நியத் தலை­யீ­டாக வந்து விடவும் கூடாது.

மாறாக, சர்­வ­தேச பங்­கேற்பு நிலை­மாற்­றுக்­காலச் செயன்­மு­றை­களில் தமிழ் அர­சியல் சமு­தா­யத்தின் நம்­பிக்­கையை வலுப்­ப­டுத்­து­வ­தாக அமைய வேண்டும். சர்­வ­தேச அவ­தா­னிகள் பற்­றிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­காவின் கருத்தை ஆக்­க­பூர்­வ­மான முறையில் அணு­கினால் ல் தேசிய நல்லிணக்கம் தொடர்பில் தமிழ்ச் சமுதாயத்திற்குள் கூடுதலான அளவுக்கு நம்பிக்கையுணர்வை ஏற்படுத்துவதற்கு பங்களிப்புச் செய்யக்கூடியதாக இருக்கும்.