செய்திகள்

சிரியா குழந்தைகளின் எதிர்காலம்- யுனிசெப் கவலை

சிரியா உள்நாட்டு போரால் இந்த ஆண்டு அந்நாட்டு குழந்தைகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெஃப் அறிவித்துள்ளது.

வன்முறை சம்பவங்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 20% அதிகரித்துள்ளது. உள்நாட்டு போரில் சண்டையிட பயிற்றுவிக்கப்படும்  குழந்தைகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

இது குறித்து மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவுக்கான யுனிசெப் இயக்குநர் Geert Cappelaere கூறுகையில், “சிரியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தைகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. சுகாதாரம், எதிர்காலம் என அனைத்துமே கேள்விகுறியாக உள்ளது” என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.