செய்திகள்

சோமாலிய தலைநகரில் கார்குண்டுதாக்குதல்

சோமலிய தலைநகரில் உள்ள ஹோட்டல் ஓன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட கார்க்குண்டு மற்றும் தற்கொலைதாக்குதலில் அதிகாரியொருவர் உட்பட 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அரசியல்வாதிகளின் நடமாட்டம் அடிக்கடி காணப்படும் அந்த ஹோட்டலை இலக்காக வைத்து கார்குண்டு தாக்குதலும்,தற்கொலைதாக்குதலும் முதலில் இடம்பெற்றுள்ளது, அதன் பின்னர் ஹோட்டலின் மசூதிக்குள் நுழைந்த ஆயுததாரிகள் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் நாடர்ளுமன்ற உறுப்பினர் ஒருவரும், தலைநகர் மொகடிசுவின் பிரதிமேயரும் கொல்லப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
முதலில் குறிப்பிட்ட ஹோட்டலின்வாயிலில் கார்குண்டொன்று வெடித்தது பின்னர் ஹோட்டலின் உள்ளே தற்கொலைதாக்குதல் இடம்பெற்றது என பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட தாக்குதல் நடைபெறும்போது சோமாலியாவின் பிரதிபிரதமரும் ,ஏனைய அமைச்சர்களும் குறிப்பிட்ட ஹோட்டலில் இருந்ததாகவும் அவர்கள் உயிர்தப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

அல்சகாப் அமைப்பு இந்த தாக்குதலுக்கு உரிமைகோரியுள்ளது.அல்ஹைடாவுடன் தொடர்புகளை பேணிவரும் குறிப்பிட்ட அமைப்பு சோமாலியாவின் பெருமளவு நகரங்களிலிருந்து பின்வாங்கியுள்ள போதிலும், கிராமங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளது.