செய்திகள்

தாட் ஏவுகணை எதிர்ப்பு பொறிமுறையை தென்கொரியாவில் நிலைகொள்ளச்செய்கிறது அமெரிக்கா

அமெரி;க்கா தனது சர்ச்சைக்குரிய தாட் ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு பொறிமுறையை தென்கொரியாவிற்கு நகர்த்ததொடங்கியுள்ளது
தாட் எவுகணையின் சில பகுதிகளை அமெரிக்கா ஏற்கனவே தென்கொரியாவிற்குள் நகர்த்தியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
தென்கொரியாவின் தென்பகுதியில் உள்ள கோல்வ் விளையாட்டு திடலொன்றை நோக்கி குறிப்பிட்ட ஏவுகணை பொறிமுறை கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
வடகொரியாவின் அணுவாயுத மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல் அதிகரித்து வருவதன் காரணமாக தாட் ஏவுகணை எதிர்ப்பு பொறிமுறையை நடைமுறைக்கு கொண்;டுவருவதற்கு முயல்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான தொலைக்காட்சி படங்களும் வெளியாகியுள்ளன.
இதேவேளை தென்கொரியாவையும் அமெரிக்காவின் சகாக்களையும் பாதுகாப்பதற்கு தாட்டினை நிலைகொள்ளச்செய்வது அவசியம் என பென்டகன் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பிட்ட ஏவுகணை பாதுகாப்பு பொறிமுறையை தென்கொரியாவிற்குள் அனுமதிப்பதற்கு அந்த நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.