செய்திகள்

நான் ஏற்கெனவே கொல்லப்பட்டு விட்டேனா!!”- சீனப் பிரஜை அதிர்ச்சி

பத்தாண்டு ஆண்டுகளுக்கு முன்பே உனக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதே’ என்று நற்சான்றிதழ் பெற வந்த ஒருவரிடம் காவல்துறை கூறுமானால், அந்த அதிர்ச்சி எப்படி இருக்கும்?உங்களால் கூற முடியுமா?அப்படியொரு அதிர்ச்சியை சீனாவைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் எதிர்நோக்கியுள்ளார்.ஒருவருடைய சுய ஆவண விவரங்களில், பத்தாண்டுகளுக்கு முன்னர் இறந்துபோன இதே பெயருடைய ஒரு குற்றவாளியின் விவரங்கள் இருந்ததால் அதிகாரிகளுக்கு ஏகப்பட்ட குழப்பம். சீன ஊடகங்களால் அடையாளம் காணப்பட்டுள்ள சென் என்பவர், குவாங்சோவில் புதிய வேலை பெறுவதற்கு குற்றப் பின்னணியில்லா சான்றிதழ் பெற காவல்துறையிடம் விண்ணப்பித்துள்ளார்.அந்த சான்றிதழை வழங்க மறுத்த காவல்துறையினர்: “கடத்தல் குற்றத்திற்காக உனக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு, 2006 ஆம் ஆண்டு நீ கொல்லப்பட்டுவிட்டதாக பதிவேடுகள் காட்டுகின்றன” என்றார்கள். இதை கேட்ட சென் அதிர்ந்து போனார்.“இதற்கு முன்னர் நான் ஹாங்காங் மற்றும் மக்காவுக்கு கூட பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்தபோது, பயண அனுமதி வழங்கப்பட்டு அரசால் அனுமதிக்கப்பட்டேன். “இப்போது காவல்துறை கூறுவது எனக்குப் புதிராக உள்ளது” என்று சென் வானொலி ஒன்றில் தெரிவித்தார்.முன்பு அவருக்கு அந்தப் பயணச் சான்றிதழை வழங்கப்பட்டதில் ஏதோ தவறு நடந்துவிட்டது என்று குவாங்சோ காவல்துறை இப்போது கூறுகின்றது.