செய்திகள்

லிபியா தடுப்பு முகாம்களில் வதையுறும் பெண்களும், குழந்தைகளும்- யுனிசெவ் அதிர்ச்சி ஆய்வு

ஆப்பிரிக்காவில் காணப்படும் வறுமை மற்றும் ஆயுத மோதல்களில் இருந்து தப்பிப்பதற்காக ஐரோப்பாவிற்கு ஆபத்தான கடல்பயணத்தை மேற்கொள்ளும் பெண்களும் குழந்தைகளும் தாக்கப்படுகின்றனர், பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்,என யுனிசெவ் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது
யுனிசெவ் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது
அடைக்கலம் கோருபவர்களிற்கும், ஐரோப்பாவிற்கு பொருளாதார காரணங்களிற்காக செல்ல விரும்புபவர்களிற்குமான மார்க்கமாக இத்தாலிக்கும் லிபியாவிற்கும் இடையிலான மத்தியதரைக்கடல் மாறியுள்ளது.
இவ்வாறு கடற்பயணத்தை மேற்கொள்வதற்காக லிபியாவில் மாத்திரம் மில்லியன் கணக்கான அகதிகள் காத்திருக்கின்றனர்,அவர்களில் பலர் தொற்றுநோய்கள் பரவக்கூடிய தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த உத்தியோக தடுப்பு முகாம்கள் லிபியாவில் காணப்படும் அரசியல் குழப்ப நிலை காரணமாக ஆயுத குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.மேலும் ஆயுதக்குழுக்கள் தங்கள் சொந்த தடுப்பு முகாம்களையும் வைத்துள்ளன.
ஆயிரக்கணக்கான பெண்களும் குழந்தைகளும் இந்த முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்,பல மாதங்களாக நரகத்தில் வாழ்கின்றனர்
யுனிசெவ் மேற்கொண்ட ஆய்வின்போது 100ற்கும் மேற்பட்ட பெண்கள் தாங்கள் பாலியல் வன்முறைகளிற்கு ஆளானதாக தெரிவித்தனர். என குறிப்பிடப்பட்டுள்ளது.