செய்திகள்

சர்வதேச தகவல் அறியும் மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பம்

சர்வதேச தகவல் அறியும் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று 28ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது
பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சுடன் இணைந்து அரசாங்க தகவல் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு கொழும்பு ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.
‘தகவல் அறிந்து கொள்வதும் ஊடக மறுசீரமைப்பும்’ என்ற தலைப்பில் இந்த மாநாடு இடம்பெற உள்ளது. நாட்டில் ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி என்பவற்றை அடித்தளமாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்டுவரும் அரசியல் கலாசாரத்தை நிலைநாட்டுவதற்குத் தேவையான ஊடகத்துறை மறுசீரமைப்புக்கு ஆக்கபூர்வமான பயனுள்ள கலந்துரையாடல் இதில் இடம்பெறும். தெற்காசிய , ஐரோப்பிய மற்றும் கனடா முதலான நாடுகளில் இருந்து வருகைதரும் ஊடகத்துறை வல்லுனர்களின் அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளுவதற்கு இந்த மகாநாடு பெரிதும் உதவும். என ஊடகத் துறை பிரதி அமைச்சர் கருணாரட்ன பரணவிதாரண தெரிவித்துள்ளார். -(3)