சர்வதேச நாணய நிதியம் நிதி உதவியை அதிகரிக்கிறது!
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு வழங்கும் நிதியுதவியை சர்வதேச நாணய நிதியம் (IMF) தற்காலிகமாக அதிகரித்துள்ளது.
இதற்கிணங்கவே இலங்கை மற்றும் உக்ரைன் போன்ற நாடுகளுக்கு கடனுதவியை வழங்கியதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
கடனுதவி வழங்கப்பட்ட இலங்கை உள்ளிட்ட நாடுகள் அதனை முகாமைத்துவம் செய்யும் விதம் குறித்து சர்வதேச நாணய நிதியம் உன்னிப்பாக அவதானிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கைக்கு கடனுதவி வழங்குவதில் இந்தியா வழங்கிய பங்களிப்பிற்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டுத் தெரிவித்துள்ளது.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜப்பான், இந்தியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் எதிர்காலத் திட்டம் தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் மாநாடு நேற்று இடம்பெற்றது.
-(3)




