செய்திகள்

சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம் அவசியமாகும் : மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தல்

இலங்கை தொடர்பான நடவடிக்கைகளுக்கு சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம் அவசியமானது என ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயித் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
நேற்று ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது அமர்வில் நேற்றைய தினம்; இலங்கை தொடர்பான விவாதம் ஆரம்பமான நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நல்லிணக்கம் உள்ளிட்ட வேலைத்திட்டங்களை வரவேற்பதாக தெரிவித்துள்ள அவர் இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமைகள் மீறப்பட்ட விடயம் தொடர்பாக சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய ஹைபிரட் நீதிமன்றத்தின் அவசியம் தொடர்பாக வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை பேரவையில் இலங்கையினால் 2015ஆம் ஆண்டில் இணங்கிய விடயங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)