செய்திகள்
சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் போராட்டம்!
வடக்கு, கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி இன்று வடக்கு கிழக்கில் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இலங்கையில் மனித குலத்திற்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் எடுக்கப்படும் இலங்கை தொடர்பான தீர்மானம் வலுப்பெறும் வகையில் குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.




