செய்திகள்

சர்வதேச பங்களிப்புடன் விசாரணை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் எதிர்ப்பு காட்டவில்லை

சர்வதேச பங்களிப்புடன் விசாரணை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் எதிர்ப்பு காட்டவில்லை என்று தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க,அந்த விசாரணையின் இறுதி அறிக்கை உள்நாட்டு நீதித்துறையினாலே வௌியிடப்படும் என்றும்  கூறியுள்ளார்.

நேற்று  வௌ்ளிக்கிழமை இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த விசாரணை நடவடிக்கைகளின் போது இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுடன் அமெரிக்கா மற்றும் மனித உரிமை அமைப்புக்களும் பங்குபற்றலாம் என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த காலத்தில் இலங்கையின் நீதித்துறை சீர்குலைந்து இருந்ததாகவும் தற்போது அந்த நிலை மாறி இருக்கின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

n10