செய்திகள்

சர்வதே நீதிபதிகள் இல்லை இலங்கை அமெரிக்கா இணக்கப்பாடு

பி.கே பாலசந்திரன்

இலங்கையில் இடம்பெற்ற யுத்தகுற்றங்கள் தொடர்பில் எவ்வகையான விசாரணைகளை முன்னெடுப்பதில் வெளிநாடுகளின் பங்களிப்பு எவ்வாறு அமையவேண்டும் என்பது குறித்து இலங்கையும் அமெரிக்காவும் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளது போல தோன்றுகின்றது.

சர்வதேசநீதிபதிகள் மற்றும் நீதித்துறையினரிற்கு பதில் சிலவகையான சர்வதேச பங்களிப்பினை ஏற்றுக்கொள்வது என்ற இலங்கையின் நிலைப்பாட்டிற்கு அமெரிக்கா இணங்கியுள்ளது.

சமீபத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர்களில் ஓருவரான டொம்மலினொவ்ஸ்கி ஏற்றுக்கொண்டுள்ளார்.ராய்ட்டரிற்கு இதனை தெரிவித்துள்ள அவர்இஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கை அரசாங்கமே பொறிமுறைகளின் கட்டமைப்பு குறித்தும்நீதிமன்றங்களின் அமைவு குறித்தும் சிந்திக்கும் என அவர் தெரிவித்துள்ளார். சிலவகையான சர்வதேச பங்களிப்பு குறித்து இலங்கை உறுதிமொழியை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தங்களுடைய இந்த விஜயத்தின்போது அமெரிக்க பிரதிநிதிகள் சர்வதேநீதிபதிகள் குறித்து எந்த இடத்திலும் குறிப்பிடவில்லைஇசெய்தியாளர்கள் அது குறித்து கேள்வி எழுப்பியவேளையே அவர்கள் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

இவைமிகவும்குழப்பகரமான விடயங்கள்இந்த விடயங்களை அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் முன்னெடுப்பதற்கு அனைத்து தரப்பினருடனுமட கலந்தாலோசனைகள் அவசியம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வாசிங்டனின் நிலைப்பாட்டில் மாற்றம்
இதன் மூலம் வெளிநாட்டு நீதிபதிகள் அவசியம் என்ற தனது முந்தையநிலைப்பாட்டை அமெரிக்கா கைவிட்டுள்ளதுஇ2015 ஓக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இலங்கையும் அமெரிக்காவும் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு குறித்து உறுதியாக தெரிவித்திருந்தன.

வெளிநாட்டு பொதுநலவாயநீதிபதிகளிற்கு அப்பால்இவெளிநாட்டு விசாரணையாளர்களும் சட்டத்தரணிகளும் அவசியம் என அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரும் தொடர்ச்சியாக இந்த விடயத்தை வலியுறுத்தி வந்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்த வாய்மொழி மூல அறிக்கையில் கூட அவர்இதனை வலியுறுத்தியுள்ளார்.

வேளிநாட்டு நீதிபதிகள் இல்லை என்பதில் இலங்கை உறுதி
ஐக்கியநாடுகள் மனிதஉரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இணை அனுசரனை வழங்கியபோதிலும் ஆரம்பத்திலிருந்து இலங்கையின் முக்கிய பிரமுகர்கள் சர்வதேச பிரசன்னத்தை நிராகரித்தே வந்துள்ளனர்.

ஜனாதிபதி சிறிசேன வெளிநாட்டு நிபுணத்துவத்தை பெற தயார்எனினும் இலங்கையின் நீதித்துறை மீது தனக்கு நம்பிக்கையுள்ளதால் வெளிநாட்டு நீதிபதிகளிற்கு இடமில்லை என தெளிவாக தெரிவித்து வந்துள்ளார்ஏனையவர்கள் இலங்கையின்சட்டங்கள் வெளிநாட்டு நீதிபதிகளிற்கு இடமளிக்கவில்லைஎன தெரிவித்துவந்துள்ளனர்.

எனினும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்களசமரவீர இந்தஇரு நிலைப்பாட்டிற்கும் இடையில் ஓரு நிலைப்பாட்டை எடுத்திருந்தார் பல சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்படும் என தெரிவித்திருந்தார்.

இலங்கையின் இறைமைக்கு பாதிப்பு ஏற்படுத்துவதற்கு எதிராக இந்தியா
இலங்கையின் இனப்பிரச்சினையில் முக்கிய பங்குவகிக்கும் இந்தியா சர்வதேசநீதிபதிகளை எதிர்த்துவருகின்றதுவெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிப்பது இலங்கையின் இறைமையில் தலையிடுவதற்கு சமமானது என அது தெரிவித்து வருகின்றது.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் சில நாட்களிற்கு முன்னர் உரையாற்றிய இந்திய தூதுவர் சையத்அக்பரூடீன் இறைமை குறித்து காணப்படும் பல்வேறு கருத்துக்களை ஐக்கியநாடுகள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மனிதஉரிமைகள் விடயத்தில் தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்படும் முயற்சிகளை அங்கீகரிக்குமாறு வேண்டுகோள் விடுத்த அவர் ஓவ்வொருநாட்டினதும் தனித்துவமான விழுமியங்கள் மற்றும் விசேடசூழமைவுகளை ஐக்கியநாடுகள் கருத்தில்எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

குறிப்பிட்ட நாடு ஓன்றிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் தீர்மானத்தை இந்தியா எதிர்க்கின்றது எனவும் அவர் தெரிவித்திருந்தார். மனிதஉரிமைகள் குறித்த சில எண்ணக்கருக்களிற்கு ஐக்கியநாடுகள் அடிபணிய கூடாது எனவும் இந்திய பிரதிநிதி கேட்டுக்கொண்டிருந்தார்.

இலங்கையின் அபிவிருத்தி குறித்தே அமெரிக்காஅக்கறை
யுத்தத்திற்கு பிந்திய இலங்கையை கையாளும் விடயத்தில் அபிவிருத்திக்கே அமெரிக்கா முன்னுரிமையளிக்கின்றது.

இலங்கைக்கு சமீபத்தில் விஜயம் செய்த இரு பிரதிநிதிகளும் இதனை வலியுறுத்தியுள்ளனர்சமதானத்தின் பொருளாதார பலாபலன்கள் இல்லாமல் நல்லிணக்கம் சாத்தியமில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.