சாகீப் சுலைமானின் கொலை விவகாரம் : சீ.சி.ரீ.வி கமராக்களை ஆராயும் பொலிஸார்
பம்பலப்பிட்டி வர்த்தகர் சாகீப் சுலைமானின் படுகொலை தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸ் குழுக்கள் அவர் கடத்தப்பட்ட பகுதியிலும் மற்றும் அவரை கடத்திச் சென்ற வாகனம் பயணித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் வீதிகளிலுமுள்ள சீ.சீ.ரி.வீ கமரா பதிவுகளை ஆராய்ந்து அதனுடாகவும் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கையெடுத்துள்ளனர்.
இதன்படி பம்பலப்பிட்டி , கொள்ளுப்பிட்டி , துன்முல்லை சந்தி , பௌத்தாலோக்க மாவத்தை , பொரளை , ஊறுகொடாவத்த , களனி பகுதிகளில் வீதிகளில் பொறுத்தப்பட்டுள்ள சீ.சீ.ரீ.வி காட்சிகளை பொலிஸார் ஆராய்ந்து வருவதுடன் மாவனெல்லையில் சடலம் மீட்கப்பட்ட பகுதியில் வீடுகளிலும் மற்றும் வர்த்தக நிலையங்களிலும் சீ.சீ.ரீ.வி கமராக்கள் பொறுத்தப்பட்டிருந்தால் அவற்றையும் ஆராய்வதற்கு பொலிஸார் நடவடிக்கையெடுத்துள்ளனர்.
எவ்வாறாயினும் கொலை செய்யப்பட்ட வர்த்தகர் கடத்தப்பட்ட இடமான அவரின் வீட்டுக்கு முன்னாள் சீ.சீ.ரி.வீ கமரா எதுவும் காணப்படாமையினால் அந்தப் பகுதியில் பக்கத்து வீட்டுப் பகுதிகளில் காணப்படும் கமரா காட்சிகளை பெற்று பொலிஸார் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)




