சாட்சிகள் இருப்பின் போர்குற்ற விசாரணை நடத்த வேண்டும் : பொன்சேகா
காலம் , நேரம் , இடங்கள் தொடர்பான சாட்சிகள் இருப்பின் போர்க்குற்ற விசாரணைகளை நடத்தலாம் எனவும் அது உள்ளக விசாரணையாகவே இருக்க வேண்டுமெனவும் முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
காலம் , நேரம் மற்றும் இடம் தொடர்பான சாட்சிகள் இருப்பின் அவற்றை அடிப்படையாக கொண்டு நாட்டு சட்டத்தின்படி விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். இதேவேளை வெளிநாட்டு நீதிபதிகளை கொண்ட கலப்பு நீதி பொறிமுறையை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நாட்டுக்கென சட்டம் உள்ளது. அதன்மூலம் தண்டனை வழங்க முடியும். என அவர் தெரிவித்துள்ளார். -(3)




