சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நவம்பர் இறுதியில்!
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நவம்பர் மாத இறுதியில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்தார்.
விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தற்போது பூர்த்தியடையும் நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி நவம்பர் 25 ஆம் திகதிக்கு பின்னர் பெறுபேறுகளை வெளியிட முடியுமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
407,129 பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் 110,367 தனியார் விண்ணப்பதாரர்கள் உட்பட மொத்தம் 517,496 விண்ணப்பதாரர்கள் 2021 சாதாரணதர பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
-(3)




