செய்திகள்

சாந்தனின் இறுதிக் கிரியை யாழில்!

உயிரிழந்த சாந்தனின் உடல் விமானம் மூலம் இன்று இலங்கைக்கு கொண்டுவருவதற்கான உத்தரவினை இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகள் பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாந்தனின் உடல் சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டுவரப்படவுள்ளது.
இதனை தொடர்ந்து அவரின் உடலை யாழ்ப்பாணம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதேவேளை சாந்தனின் இறுதி கிரியைகள் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. இதேவேளை தாயகத்தில் சாந்தனின் பூவுடலுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்த மக்கள் தயாராகி வருகின்றனர்.
-(3)