சாபாநாயகருக்கு மரண அச்சுறுத்தல் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்: ஒன்றிணைந்த எதிர்க்கட்சி
சபாநாயகருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் விடயம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும் தெரிவித்துள்ளார்.
தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்த பின்னர் உரையாற்றிய டலஸ் அழகப்பெரும இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். அந்த விசாரணைக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்குகிறோம்.
விசாரணை நடத்தி அச்சுறுத்தியவர் யார் என்பதனை கண்டுபிடிக்க வேண்டும் இல்லையெல் அந்த குற்றச்சாட்டு எங்கள் மீது வந்து விழும் என தெரிவித்துள்ளார்.
R-06




