செய்திகள்
சாமிமலை , வட்டவளையில் வெள்ளம் (Photos)
ஹட்டன் , மஸ்கெலியா பகுதிகளில் பெய்யும் கடும் மழையால் அந்த பிரதேசங்களில் பல இடங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளன.
சாமிமலை பகுதியிலும் , வட்டவளை பகுதியிலும் வீடுகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அங்குள்ள செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ஹட்டன் – கினிகத்தேனை பிரதான வீதியில் தியகல பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)





