சாரதிகளே உங்கள் உடல் உறுப்புகளை தானமாக வழங்க விருப்பமா?
விபத்துக்களில் உயிரிழக்கும் வாகன சாரதிகளின் உடல் உறுப்புகளை உறுப்பு மாற்று சிகிச்சைக்கு உட்படுத்தபடுவோருக்கு தானமாக வழங்கும் வகையில் சாரதிகளின் சம்மதத்தினை பெற்று அதனை சாரதி அனுமதிப்பத்திரத்தில் உள்ளடக்கும் வகையில் புதிய நடைமுறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்ககம் தீர்மானித்துள்ளது.இ
சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பப் படிவம் மற்றும் புதுப்பித்தல் படிவம் என்பவற்றில் உடல் உறுப்பு மற்றும் இழையங்களின் தானத்திற்கு சம்மதம் தெரிவிக்கும் கூற்று ஒன்றினை உள்ளடக்கும் விதமாக மறுசீரமைப்பதற்கும், வீதி விபத்துமூலம் மூளைச்சாவு மற்றும் குருதிச்சுற்றோட்ட ரீதியாக இறக்க நேரிடும் சாரதிகளிடமிருந்து அவர்களின் உடல் உறுப்பு மற்றும் இழையங்களை தானம் செய்வதற்குரிய சம்மதத்தினை தற்போதுள்ள சாரதி அனுமதி பத்திரத்தில் காட்சிப்படுத்தக் கூடியவாறு திருத்தி மறுசீரமைப்பதற்கும் சுதேச வைத்திய அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. என தெரிவித்துள்ளார். -(3)




