செய்திகள்

சாவகச்சேரியில் 2 கோடி ரூபா பெறுமதியான கஞ்சா மீட்பு

drugsயாழ். சாவகச்சேரி மீசாலை மேற்கு பகுதியில் வயல் காணி ஒன்றில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த 231 கிலோ கேரளா கஞ்சா பொதிகளை சாவகச்சேரி பொலிஸார் நேற்று இரவு மீட்டுள்ளனர்.

மேற்படி பகுதியில் உள்ள வயல் காணி ஒன்றில் மேற்படி கஞ்சா பொதிகள் காணப்படுவதாக கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இந்த கஞ்சா பொதிகளை தாம் மீட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் எவரும் கைது செய்யபடவில்லை எனவும் மீட்கப்பட்ட கஞ்சா சுமார் 2 கோடி ரூபா பெறுமதியானது எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த கேரளா கஞ்சா பொதிகள் இன்றைய தினம் சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொஸிசார் தெரிவித்தனர்.

Related News