செய்திகள்

சிகரட்டுகளுக்கு 90 வீத வரியை அறிவிடும் யோசனை செவ்வாய்க்கிழமை அமைச்சரவைக்கு வரும்

புகையிலை பொருட்களுக்கான 90 வீத வரியை அறவிடுவது தொடர்பான யோசனை அடுத்த வாரம் நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை சுகாதார அமைச்சில் நடைபேற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போது புகையிலை பொருட்கள் உற்பத்தி நிருவனங்களிடமிருந்து 72 வீத வரி அறவிடப்படும் நிலையில் அதனை 90 வீதம் வரை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் இதன்படி அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் அந்த யோசனையை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் அந்த நிகழ்வில் தெரிவித்துள்ளார்.

N5